*******
In English and in Tamil. தமிழிலும் ஆங்கிலத்திலும்.
…
This concerns many issues connected with Pongal, the Harvest festival of Tamil Nadu.
A young Tamilian friend asked me to write about PETA. Many are totally misinformed about this organisation, and are even calling for the banning of PETA. And thus this article. This will be largely Pictorial!
இக்கட்டுரை, ஏராளமான படங்களுடன் ஆங்கிலத்திலும் எழுதப்படிருக்கின்றது. …இது PETAவைப் பற்றி என் இளம் நண்பர் ஒருவர் கேட்டிருந்ததால் தயாரான கட்டுரை. PETAவைப் பற்றி சற்று அதிகமாக இருக்கும்.
…
என்றாலும், PETAவைப் பற்றிய பேச்சு தொடங்கியது ‘ஜல்லிக்கட்டிலிருந்து’ தான். இதோ, ஜல்லிக்கட்டு சம்பந்தமான எனது சில முக்கியமான கருத்துக்கள்:
1. ஜல்லிக்கட்டு தமிழர்களின் ஒரு விளையாட்டு.
2. ஜல்லிக்கட்டை விட மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன. அதாவது, தமிழ் நாட்டு ஆறுகளில் இருந்து அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவது, அதனால் காய்ந்த தமிழ் நாட்டு நதிகள், இறந்த லட்சக்கணக்கான மரங்கள், பாதிக்கப் பட்ட விவசாயம்.
*****
PETAவைப் பற்றி பேசுவதற்கு முன்னால், ஜல்லிக்கட்டைப் பற்றி அதிகம் அறியாத, முக்கியமாக தமிழர் அல்லாதவர்களுக்கு சற்று எழுதுகிறேன்:
JALLIKKATTU
I have been Highly Cynical of the large support ‘Jallikkattu‘ has received. Because, they have chosen a ‘Safe’ issue to protest against.
The Youth of Tamil Nadu turned up in strength in many parts of the same, and above We see the crowds gathered at the famous Marina Beach at Chennai, in support of Jallikkattu.
***
This is what Jallikkattu (something peculiar to Tamil Nadu), is: – You hang on to the Hump of the released Bull for 30 metres, as shown:


***
No Bulls are killed during the event, No Swords driven into them, unlike Spanish bull fighting.
ஸ்பெயின் நாட்டில், ‘Bull Fighting’ எனப்படும் நிகழ்ச்சியில், காளைகளுல் வாள்கள் புகுத்தப்படுகின்றன; இதனால் காளை மிகுந்த காயமடைவதடுன், அடிக்கடி இறந்தும் விடும்.
ஜல்லிக்கட்டு அவ்வாறானது அல்ல என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
***
So what is all the Hue and Cry about?
PETA
“PETA India operates under the simple principle that animals are not ours to eat, wear, experiment on or use for entertainment.” [ From the introduction to their website. ]
On a petition filed by PETA, a group fighting for Animal Rights, the Supreme court of India banned this ‘sport.’ Jallikkattu supporters not only what that that event be allowed and held; they also want PETA banned!
சுருக்கமாக சொன்னால், PETA என்பது PEOPLE for ETHICAL TREATMENT of ANIMALS என்பதாகும்.
அதாவது, நாம் விளங்குளுடனும் நீதி-நெறிக்குரிய விதத்தில் பழகவேண்டும் என்பதாகும்.
PETA, விலங்குகள் நம் விளையாட்டுக்கான, சோதனை செய்துப் பார்க்க, உண்பதற்கும் அணிவதற்க்குமான ‘பொருட்கள்’ அல்ல என கூறுகின்றது.
சேவல் சண்டைகளும், ஜல்லிக்கட்டும், இதர மிருக-ஓட்ட போட்டிகளும் இதில் அடங்குகின்றன.
பார்ப்பவர்கள் மிக்க பொறுமையாக, ஆனால் ஆவலுடன் தான், செருப்புகளையும் கழற்றி விட்டு, ஆற அமர உட்கார்ந்து, பார்க்கின்றார்கள். யாராவது கேட்டோமா, “சேவலே, உனக்கு எப்படி இருக்கின்றது?” என்று?
இப்படத்திலிருந்து நாம் கவனிக்கக் கூடிய தவறுகளை கண்டு பிடித்து விட்டீர்களா? …மாடோ குதிரையோ, சிமெண்ட் அல்லது தார்கோல் ரோடுகளில் ஓடுவதற்காக படைக்கப் பட்டவை அல்ல. இங்கு சறுக்கி விழும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. (நமக்கு) இடதுள்ள மாட்டின் முன் கால்கள் நடுவிலும், கால்கள் மத்தியிலும், மேலும் அடுத்த மாட்டின் பின் இடது காலிலும் உள்ள குறிகள், இவை பல முறை விழுந்திர்க்கின்றன என்பதைக் காட்டுகின்றது. …மாடுகள் இருக்க கட்டப்பட்டிருக்கின்றன. …வண்டி ஓட்டுபவன் நல்ல தடியாக இருக்க, இவ்வளவு மெலிந்த மாட்டை பார்ப்பது வருத்தமாக இருக்கின்றது.
…
அனேக மருந்துகள் மனிதர்களுக்கு பகிர்வதற்கு முன் குரங்குகளுக்கு கொடுக்கப்பட்டு சோதிக்கபடுகின்றன.
…
யானை தந்தமும், காண்டா மிருகத்தின் கொம்பும் மனிதரால் அவை உயிருள்ள நிலையிலேயே அறுத்து எடுக்கப் படுவதுண்டு.
மிருகங்களின் தோல்கள் உடையாக, கால் அணிகளாக, கார் சீட்டுகளாக, இன்னும் எத்தனையோ விதங்களில் உபயோகிக்கப் பட, இதற்காக கொல்லப்பட, பல தவனங்களில் உயிருள்ளபோதே உரிக்கப் படுகின்றன.
ஆக, PETA ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் மேற்கூறியதைப்போல பலவற்றிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது.
காண்க: http://www.petaindia.com/
***
இங்கு இறைச்சி போன்றவற்றை உண்பதைப் பற்றி:
மாமிசத்தையும் மீன்களையும் உணவாக்கக் கூடாது, ஏனெனில் அவற்றில் ‘உயிர்’ இருக்கின்றது என்று கூறினால், நான் கேட்கின்றேன்: ‘ஏன், பயிர்களிலும், தாவரங்களிலும், மரம்-செடி-கொடி-காய்-கனிகளிலும் உயிர் இல்லையா?
ஆனால், இவ்வாறு கேட்டுக் கொண்டு போனால் வாழக் கூட முடியாது!
ஆக, என் கூற்று:
‘அவசியமானவற்றிற்க்காக’ விலங்குகளை பயன் படுத்துவோம். நம் ‘ஆசைகளுக்காக’ அல்ல.
***
ஸ்பெயின் நாட்டின் அப்பழக்கத்தைப் பார்த்து பலர் கொந்தளித்து விடலாம். ஆனால், நம் நாட்டில், நாம், நமது மிருகங்களுடன் எவ்வாறு பழகுகின்றோம்?
CRUELTY TO CREATURES IN THE NAME OF SPORT:
வெகு நாட்களாக, ஜல்லிக்கட்டினால் மனிதர்கள் தான் காயமோ மரணமோ அடைகின்றார்கள், காளைகளுக்கு ஆபத்தோ கஷ்டமோ இல்லை என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன், எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால்,
இம்மாடுகளுக்கு மூக்கில் போடப்படும் கயிற்றை பார்த்த பிறகு, என் மனம் மாறி விட்டது.
மிருகங்களுக்கு வலிக்காது என்று எண்ணுவது மிகப் பெரிய தவறு.
***
காளைகள் சாதாரணமாக ௬௦௦ (600) முதல் ௯௦௦ (900) கிலோ எடை உள்ளவை என்றும், மனிதனோ, ௬௦ (60) முதல் ௮௦ (80) கிலோ எடை உள்ளவன் என்றும் சொல்லலாம். தன்னை விட ௧௦ (10) மடங்கு அதிக எடை உள்ள ஒரு ஜீவனை மனிதன் ஒரு கையால் அடக்கி வைக்கின்றான் என்றால், அது எப்படி? …அந்த வாயில்லா ஜீவனின் மூக்கின் வழியாக ஒரு வலயத்தையோ, கயிற்றையோ போட்டுத் தான்.
அதுக்க என்ன, என்றால்? மனிதர், முக்கியமாக பெண்கள், எத்தனையோ அணிகளை போட்டுக் கொள்ளவில்லையா என்றால்?
சரி, மூக்குத்திகளோ, காதணிகளோ… முடியிலோ, துணியிலோ மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு எப்படி இருக்கின்றது, எப்படி வலிக்கின்றது என்று தெரியுமா? …உன் மகளை கேட்டால் தான் உண்மையான பதில் கிடைக்கும்.
இன்னொரு முக்கிய விஷயம். ‘நமது பிள்ளைகள்’ என்று சொல்லி வளர்க்கும் மாடுகளுக்கு, மூக்கில் நாம் ஒன்றும் ‘அழகு’ பார்க்க அந்த வலயங்களையோ, கயிற்றையோ போடவில்லை.
நம் மகளுக்கு போட்ட மூக்குத்தியோடு ஒரு ‘நூல்’ சேர்த்து கட்டப் படவில்லை.
மாடுகளுக்கு அது நடக்கின்றது. ஏன்? அதை கட்டுப் படுத்துவதற்காக. அவ்வளவு பெரிய அந்த ஜீவன் எப்படி நமக்கு கட்டுப் படுகின்றது? அதற்க்கு ஏற்படும் வலியால் தான்.
இம்மாட்டின் தலை மட்டும் இம்மனிதனின் முழு கையளவு இருக்கும்: அதாவது அவன் விரல்களிலிருந்து தோள்பட்டை வரை. அத்தே பெரிய மாட்டை இவன் அலட்சியமாக, ஒரு கையால் பிடித்துக் கொண்டு இருக்கின்றான். ஆனால்,
அவன் பிடித்திருக்கும் கயிற்றில், மூக்கிலிருந்து செல்வது ‘டென்ஷன்’-இல் (Tension) இருப்பதை கவனிக்க வேண்டும். அதனால் உண்டாகும் வலியை தவிர்க்க, இந்த வாயில்லா ஜீவன், நக்கிக் கொள்கிறது. அதற்க்கு தெரிந்தது அவ்வளவு தான்.
அதன் மூக்கில் எவனும் ஐஸ் க்ரீம் (Ice Cream) தடவி வைக்கவில்லை அல்லவா?
இந்த மாட்டால் பேச முடிந்திருந்தால் அது என்ன சொல்லி இருக்கும்? ‘அப்பா, என் கன்று பிராயத்திலிருந்து முத்தமிட்டு வளர்த்தாயே, இப்போது நான் என்ன தப்பு செய்தேன்? எதற்க்காக எனக்கு நீ இந்த தண்டனையை, வலியை, வேதனையை கொடுக்கின்றாய்?’ என்று தானே கேட்கும்?
மேல்காணும் படத்தில் எழுதியும் இருக்கின்றார்கள், நாமும் கேட்டு விடலாம். “எங்கே, இந்த காளை தன் மூக்கில் கயிறுகள் இருந்தாலும் இப்படி அன்பு செய்யவில்லையா?” என்று.
PAVLOVIAN CONDITIONING என்று ஒன்று உண்டு. பாவ்லோவ் என்ற ஒரு விஞ்ஞானி, ஒரு நாய்க்கு உணவு கொடுக்கும்போதெல்லாம் ஒரு மணி அடித்தானாம். நாய்க்கு மணி ஓசை கேட்டால் எச்சில் சுரக்கும் பழக்கம் உண்டாகி விட்டது. …சில நாட்கள் பொருத்து, அதே மணியை அடித்துக் கொண்டு, நாய்க்கு மின்சாரத்தால் ‘ஷாக்’ (Electrical Shock) கொடுத்தானாம். நாய்க்கு இப்பவும் எச்சில் வந்ததாம்.
இதைப்போலவே, STOCKHOLM SYNDROME (ஸ்டோக்ஹோல்ம் சின்றோம்) என்றும் ஒன்று உண்டு. இதில் என்ன கண்டுப் பிடிக்கப்பட்டது என்றால், சுருக்கமாக, எளிமையாக சொன்னால், தீவிரவாதிகளின் பிடியில் இருப்பவர்கள், நீண்ட நாட்கள்/நேரம் அவ்வாறு இருந்து விட்டால், தங்களை துன்புருத்திய அதே தீவிரவாதிகள் சார்பாகவே பேசவும் இருக்கவும் செய்கிறார்கள்.
…
மூக்கில் கயிறு போட்டு வளர்க்கும்/இழுக்கும் அந்த எஜமானனை நக்கும் அம்மாட்டின் பக்கம் மீண்டும் சென்றால், அது தனது குழந்தைத் தனத்தனையும், அன்பையும், உயர்வையும் காட்டுகின்றது. …ஆறு அறிவு உள்ளவன் என்று சொல்லிக் கொள்ளும் மனிதன் மாட்டை தன் ‘குழந்தை’ என்று சொல்லி, அதன் மூக்கில் கயிறு போட்டு அங்கும் இங்கும் இழுத்துச் செல்கின்றான்.
***
இது காளைகளுக்கு மட்டும் நடப்பதல்ல. பசுக்களும் செய்யப்படுகின்றது.
***
ஆனால்,
இவற்றைப் பார்த்து கண் கலங்காதவர்களுக்கு மாட்டின் மூக்கில் கயிறு போட்டால் கண்ணீர் வரப்போவதில்லை.
***
PETAவை பற்றிய ஒரு முக்கியமான விஷயம்… இது ஒரு இயக்கம். குடிமக்களைப் போலவே, நம்மைப் போலவே, இதுவும் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கும். எதையும் ‘செய்து வைக்கக் கூடிய’ வல்லமை இதற்க்கு கிடையாது. இது நிர்வாகத்தின் (அரசாங்கத்தின்) பாகம் அல்ல.
***
JALLIKKATTU AND FARMING
In India, Farming means more of Tilling the Land and producing crops. Those who are fighting for Jallikkattu say that the event helps the Bulls become Better for the ploughing. …Now some who may comment on this may say that they are used Only for Seed, and that is Right.
Below, Bulls used for Seed.
Is it not interesting, and Sad, that those used for Jallikkattu alone have Ropes through their Nostrils? …Below, the Bullocks used for Farming.
The Noticeable difference between the two breeds is that farm-and-cart Bullocks are Neutralised, and do not have Humps.
More, for people to say that Roping a Bull through his nose, Annoying him, Goading him, all in the name of ‘Training’ makes him better is funny in the least. Because, Other States have done their farming well enough without all this Rigmarole.
காளைகள் ஜல்லிக்கட்டில் இறக்கப் படுவதால் அவை ‘விவசாயத்திற்கு’ மேலும் உபயோகமுள்ளவையாக மாறுகின்றன என்பது பலரின் கூற்று. ஆனால் ஜல்லிக்கட்டில் பயன் படுத்தப்படும் காளை ஏர் விழ பயன் படுத்தப் படுவதில்லை. விதைக்காக பயன் படுத்தப் படுகின்றன.
ஆனால், இந்தியாவையே எடுத்துக் கொண்டால், ஜல்லிக்கட்டு இல்லாமலே மற்ற மாநிலங்களில் விவசாயம் நன்றாக இல்லையா?
…
Presumably, this is how they ‘Train’ these bulls for the event:
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நடக்கும் இவை குரூரம் இல்லையா?
Three Ropes, a Frothing mouth… Blindfolded kindness.
கண்கள் மூடப்பட்டு, அது மிரண்டிருக்க, மூன்று கயறுகள், வாயில் நுரை.
The bull is being Force-fed something.
The bull is not interested, and its Tail is Literally being Twisted.
காளையை ‘சந்தோஷப்படுத்தத் தான் அதன் வால் முறுக்கப் படுகின்றதோ?
The bull is refusing to enter the fray, and is being ‘encouraged’ by its Tail getting Bitten. Which makes the poor bull Literally Shit himself.
இங்கு, வால் கடிக்கப் பட்டதில் காளைக்கு மலமே வந்து விட்டது.
***
I personally Object to Jallikkattu because People get Trampled, Gored, and even Deaths occur.
ஜல்லிக்கட்டினால் மக்களுக்கு உண்டாகும் ஆபத்து, காயங்கள், மரணம் கூட, வெளி வருவதில்லை. இவ்வாபத்துகளுக்காகவே நான் இதை எதிர்க்கின்றேன்.
Enough?
***
PETAவை மட்டுமல்ல, விலங்குகளின் உரிமைகளுக்காகவும், பாதுக்காப்புக்காகவும் அயல் நாடுகளில் நிறைய ஆதரவு உண்டு. …சாதாரணமாகவே மக்களுக்கு விலங்குகள் மேல் நிறைய பட்ட்ருதல் உண்டு. அதனால் தான் நேஷனல் ஜியோக்ராபிக், டிஸ்க்கவரி, அனிமல் பிளானெட் (National Geographic, Discovery and Animal Planet) என்பவை அவ்வளவு பிரபலமாக இருக்கின்றன; பார்க்கப் படுகின்றன.
நம் நாட்டில் தான் எல்லாம் ‘சப்.’ காவேரியின் நீர் கொள்ளையை கண்டுக் கொள்ளவில்லை, நீர்/வருங்காலம்/அணு சக்தியால் அழிவு என்பதைப் பற்றி யோசிக்கவில்லை.
‘வெளி நாட்டினர்’ PETAவுக்கு ஆதரவு தருகின்றார்கள் என்பதற்காக ‘PETA’வை தவறு சொல்வது தவறு! PETAவின் தர்க்கங்களில் தவறு இருக்கின்றதா என்று தான் ஆராய வேண்டும்.
…
PETAவும் சரி, மேனகா காந்தியும் சரி, விலங்குகளுக்காக இவ்வளவு போராடுகின்றார்கள்.
நான் முதன்மையாக மனிதர்களுக்காக போராடுகின்றவன்.
எனது வலைப்பதிவில் (Blog) ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கட்டுரைகள், மனித உரிமை, மனித நலம், சுதந்திரம், மாந்தர்களுக்கு பாதுகாப்பு, நீதி-நியாயம், மணல் கொள்ளை என்பதைப் பற்றி எழுதி இருக்கின்றேன்.
இதன் ஒரு பாகமாக கீழ்காணும் இணைப்பில் (Link) காண்டா மிருகங்களின் எண்ணிக்கை 98% குறைந்து விட்டதாக Animal Planetஇல் செய்தி வந்திருக்க, அதைப் போன்ற சேனல்-களுக்கு ஆதரவு தருவோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, அச்சானல்களுக்கு பணம் கொடுத்தால், விளம்பரம் வழியாக ‘அவர்களுக்கு’ எவ்வளவு திரும்பும் என்பதை எடைப்போட்டே செய்கின்றார்கள் என்பதை குறிப்பிட்டுள்ளேன்.
முக்கியமாக, மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை, முக்கியமாக நீர் பிரச்சனையை யாரும் அதிகமாக கண்டுக்கொள்ளவில்லை என்று எழுதி இருக்கின்றேன்.
ஆகக்கூடி விலங்குகளுக்கு முதலிடம் கொடுப்பவன் அல்ல நான்.
***
THE DYING CAUVERY
Not just the Cauvery (Kaveri), but altogether too many rivers in Tamil Nadu have gone dry because of the administration (government) allowing Limitless mining of Sand from them, which becomes, and is strongly termed by me as Looting.
As the mining/looting is done with administrative permission, with people from Top to bottom getting commissions, including, I am sure, state chiefs, (None of my points provable in a court of law, of course), And As Objectors are first tried to be Bought off, and if that is not working, Intimidated and even Killed, Practically Nobody has dared to raise their voice against this, except this Old Fool, Yours Truly.
The sort of Support for Jallikkattu could and Should have been organised for protecting the Rivers. That this has not been done is my Pain.
I liken this present protest to a Son going out to play, let us say, Cricket, very much liked in India, when he receives news that his Mother is in the ICU.
காவிரித்தாய் அளவுக்குமீறி மணல் அள்ளப்பட்டதால் மரணப்படுக்கையில் (ICU வில்) கிடக்கின்றாள். தமிழகம் பாலைவனமாக மாறிக்கொண்டு இருக்கின்றது. தமிழக இளைஞர்கள் தாயை மீட்க வேண்டும்.
*******
I’d never heard of Jallikkattu, I’m sure that’s no surprise. It sound barbaric. Almost as barbaric as bull fighting, but at least in this “game” the bull fights back. Some of those pictures of the people being skewered, makes me ask, why would people be so eager to play this? People really are dumb.
LikeLiked by 1 person
Thank You, my Dear Wendy. You have raised good points. …Actually, MOST of the supporters of this so called sport would not venture into the fray at any cost.
As for the participants, is it more of Bravado instead of Bravery.
As bull owners make a lot of money by betting and hoping to sell their stock, they encourage it with prizes.
But, as You say, people ARE Dumb. They will not fight for Worthy causes. …Regards. 🙂
LikeLike
When we do not treat one another w/ decency, we are hardly likely to treat our animals — poor creatures who cannot speak up for themselves — any better.
LikeLiked by 1 person
Indeed, and Well said, my Dear Anna. Regards. 🙂
LikeLiked by 1 person